
Kishan, Chahar To Join India A Squad In South Africa (Image Source: Google)
இந்திய ஏ அணி தென்ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இந்திய ஏ அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய ஏ அணியில் தீபக் சஹார், இஷான் கிஷன் ஆகிய இருவரும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இருவரும் நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது டி20 ஆட்டத்தில் விளையாடினார்கள்.
இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்திய ஏ அணியில் உபேந்திர யாதவ் மட்டும் விக்கெட் கீப்பராக இருந்தார். கூடுதலாக இன்னொரு விக்கெட் கீப்பர் தேவை என்பதால் இஷான் கிஷன் தேர்வாகியுள்ளார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிகமாக விளையாடாமல் போனாலும் பந்தை நன்கு ஸ்விங் செய்யும் திறமை உள்ளதால் தீபக் சஹார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.