
KKR Deserves An Upper Hand To Make A Game Out Of Batting Friendly Pitch: MS Dhoni (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 38ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்தது. அதன்பின் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி இன்னிங்ஸின் கடைசிப்பந்தில் இலக்கை எட்டி, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
இந்த போட்டி குறித்து பேசிய தோனி, "இது ஒரு நல்ல வெற்றி. சில நேரங்களில் நீங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவீர்கள், நீங்கள் தோற்பீர்கள். அதேசமயம், நீங்கள் நன்றாக விளையாடபோது வெற்றிப் பெறுகிறீர்கள் என்றால், அதனை மகிழ்ச்சியுடன் அனுபவித்துவிட வேண்டும். இரு தரப்பிலிருந்தும் நல்ல கிரிக்கெட் விளையாடப்பட்டது.