
KKR v DC, 41st IPL Match Probable Playing XI - Race For Qualification (Image Source: Google)
ஐபிஎல் 14வது சீசனில் இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகின்றது.
10 போட்டிகளின் முடிவில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்தில் இருக்கும் டெல்லி அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டது. அதேசமயம் 10 போட்டிகளின் முடிவில் 8 புள்ளிகளை பெற்றுள்ள கேகேஆர் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெறுவது கட்டாயம்.
அந்த அவகையில் இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். கேகேஆர் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், கடந்த போட்டியில் காலில் காயமடைந்ததால், அவருக்கு பதிலாக பென் கட்டிங் அல்லது டிம் சேய்ஃபெர்ட் ஆகிய அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.