Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - அணிகள் ஓர் அலசல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 21, 2025 • 12:45 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 39ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 21, 2025 • 12:45 PM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கேகேஆர் அணி தோல்விக்கு பிறகும், குஜராத் அணி வெற்றிக்கு பிறகும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடிவுள்ள 7 போட்டிகளில் தலா மூன்று வெற்றி மற்றும் நான்கு தோல்விகளைச் சந்தித்துள்ளது. மேற்கொண்டு கடந்த போட்டியிலும் அந்த அணி 111 என்ற இலக்கை எட்ட முடியாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் அந்த அணியின் பேட்டிங் துறை மீதான கேள்விகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக குயின்டன் டி காக், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் மீது அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் ரஹ்மனுல்லா குர்பாஸ் விளையாடுவதற்கான வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் அணியின் பந்துவீச்சு துறையில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, வைபவ் ஆரோரா, ஹர்ஷித் ராணா ஆகியோர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது.  இதனால் இன்றைய ஆட்டத்திலும் இவர்கள் சரியாக செயல்படும் பட்சத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை தடுப்பது எளிதல்ல.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: குயின்டன் டி காக்/ரஹ்மனுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ரமன்தீப் சிங், ஆண்ட்ரே ரசல், மொயீன் அலி, ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

குஜராத் டைட்டன்ஸ்

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஜோஸ் பட்லர், சாய் சுதர்ஷன், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் உள்ளிட்டோர் பாரமான ஃபார்மில் உள்ளனர். அவர்களுடன், ஷாரூக் கான், ராகுல் திவேத்தியா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோரும் இருப்பது அணிக்கு மிக்கப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா ஆகியோரும், சுழற்பந்துவீச்சில் ரஷித் கான், சாய் கிஷோர் ஆகியோரும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறனர். அவர்களுடன் இஷாந்த் சர்மா, அர்ஷத் கான் உள்ளிட்டோரும் சோபிக்கும் பட்சத்தில் எதிரணி பேட்டர்களுக்கு அது நிச்சயம் தலைவலியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • குஜராத் டைட்டன்ஸ் - 02
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 01
  • முடிவில்லை - 01

Also Read: LIVE Cricket Score

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர்
  • பேட்ஸ்மேன்கள் - அஜிங்க்யா ரஹானே, ஷுப்மான் கில், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், சாய் சுதர்ஷன் (துணை கேப்டன்), ஆங்கிரிஷ் ரகுவன்ஷி
  • ஆல்ரவுண்டர் - சுனில் நரைன் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.
     

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement