
Knockout stage of Cooch Behar Trophy postponed due to surge in COVID-19 cases (Image Source: Google)
நாடுமுழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 19 வயதிற்குட்பட்டோருக்கான கூச்பெஹர் கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் நாடுமுழுவதும் நடைபெற்று வந்தது.
இதையடுத்து இத்தொடரின் நாக் அவுட் போட்டிகள் நாளை முதல் புனேவில் நடைபெறுதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இத்தொடரின் நாக் அவுட் போட்டிகளை ஒத்திவைப்பதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.