ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 35ஆவது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் இந்த போட்டி இன்று பகல் 3:30 மணிக்கு தொடங்கவுள்ளது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
- இடம் - டிஒய் பாட்டில் மைதானம்.
- நேரம் - மாலை 3.30 மணி
போட்டி முன்னோட்டம்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி 7 போட்டிகளில் விளையாடி, அதில் 3 வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 7ஆம் இடத்தில் உள்ளது.
அந்த அணியில் ஆரோன் ஃபிஞ்ச், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பாக விளையாடிவரும் நிலையில் மற்ற வீரர்களும் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சில் சுனில் நரைன், கம்மின்ஸ் ஆகியோர் வலுசேர்த்தாலும் வருண் சக்ரவர்த்தி கட்டாயம் உதவ வேண்டிய இடத்தில் உள்ளார்.
அதேபோல அதிரடி ஃபார்மில் உள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, 6 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் பெற்று ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அணியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறையிலும் குஜராத் அணி சிறப்பாக செயல்பட்டுவருவதால், நிச்சயம் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச லெவன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - வெங்கடேஷ் ஐயர், ஆரோன் ஃபின்ச், ஸ்ரேயாஸ் ஐயர் (கே), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெல்டன் ஜாக்சன், சுனில் நரேன், பாட் கம்மின்ஸ்/ டிம் சவுத்தி, சிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி
குஜராத் டைட்டன்ஸ் - விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், விஜய் சங்கர்/ சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - விருத்திமான் சாஹா
- பேட்டர்ஸ் - ஷ்ரேயாஸ் ஐயர், ஆரோன் ஃபின்ச், ஷுப்மான் கில், டேவிட் மில்லர்
- ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்திக் பாண்டியா
- பந்துவீச்சாளர்கள் - ரஷித் கான், முகமது ஷமி, லாக்கி ஃபெர்குசன்.
Win Big, Make Your Cricket Tales Now