ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிளே ஆஃப்ஸ் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு நவி மும்பையின் டிஒய் பாட்டில் மைதானத்தில் நடக்கும் 66ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
- இடம் - டிஒய் பாட்டில் மைதானம், நவி மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
அறிமுக அணியான லக்னோ இந்த சீசனில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்ட அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுவிடும். ஒருவேளை தோல்வி கண்டாலும் அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. லக்னோ அணி தனது முந்தைய இரு லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்திருக்கிறது. எனவே வெற்றிப் பாதைக்கு திரும்பவும், பிளே ஆஃப் சுற்றுக்கு 2-வது அணியாக முன்னேறவும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவது அந்த அணிக்கு உதவிகரமாக இருக்கும்.
லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (469 ரன்கள்), தீபக் ஹூடா (406 ரன்கள்), குயின்டாக் டி காக் (362 ரன்கள்) சிறப்பான நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் அவேஷ் கான் (17 விக்கெட்டுகள்), ஜாசன் ஹோல்டர் (14 விக்கெட்டுகள்), ரவி பிஷ்னோய் (11 விக்கெட்டுகள்) வலுசேர்க்கிறார்கள்.
மறுபுறம், கொல்கத்தா அணி இந்த தொடரில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 6ஆம் இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும். கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (351 ரன்கள்), நிதிஷ் ராணா (319 ரன்கள்) நல்ல ஃபார்மில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் பேட்டிங் (330 ரன்கள்) மற்றும் பந்து வீச்சில் (17 விக்கெட்டுகள்) கலக்கி வருகிறார். அதேபோல் பந்து வீச்சில் உமேஷ் யாதவ், டிம் சவுதி, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தியும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் லக்னோ 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தேச லெவன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: வெங்கடேஷ் ஐயர், பாபா இந்திரஜித், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர் (கே), சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், சுனில் நரைன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, வருண் சக்ரவர்த்தி.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், KL ராகுல் (கே), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், அவேஷ் கான், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான்.
ஃபேண்டஸி லெவன்
- கீப்பர் - லோகேஷ் ராகுல், குயின்டன் டி காக்
- பேட்ஸ்மேன்கள் - தீபக் ஹூடா, நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர்
- ஆல்-ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸ்ஸல், ஜேசன் ஹோல்டர்
- பந்துவீச்சாளர்கள் - அவேஷ் கான், டிம் சவுத்தி, மொஹ்சின் கான்
Win Big, Make Your Cricket Tales Now