ஐபிஎல் திருவிழா 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் தொடங்கியுள்ள ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டிவருகிறது.
இதில் இன்று நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
- இடம் - வான்கேடே மைதானம், மும்பை
- நேரம் - இரவும் 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால் பெங்களூர் அணியுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மறுபக்கம் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பெங்களூர் அணியுடன் நடந்த கடந்த போட்டியில், கொல்கத்தாவின் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. 128 ரங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஆனால் பந்துவீச்சில் உமேஷ் யாதவ், டிம் சவுதி போன்றோர் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
அதேசமயம் மறுபக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் ஷிகர் தவான், மயங்க் அகர்வால், பானுகா ராஜபக்ச போன்றோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். கடந்த முறை 208 ரன்களை சேஸ் செய்துள்ளதால், மிகுந்த தன்னம்பிக்கையுடன் இம்முறை களம் இறங்குவார்கள்.
எனவே போட்டியை வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டுவதால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இந்த போட்டியில் பஞ்சம் இருக்காது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 29
- கொல்கத்தா வெற்றி - 19
- பஞ்சாப் வெற்றி - 10
உத்தேச லெவன்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர் (கே), சாம் பில்லிங்ஸ், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
பஞ்சாப் கிங்ஸ் - மயங்க் அகர்வால் (கே), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், பானுகா ராஜபக்சே, ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ராஜ் பாவா, அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - பானுகா ராஜபக்ச
- பேட்டர்ஸ் - ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், ஷாருக் கான், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா
- ஆல்-ரவுண்டர்கள் - ஒடியன் ஸ்மித், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல்
- பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, உமேஷ் யாதவ்.
Win Big, Make Your Cricket Tales Now