தோனியின் அனுபவத்தை மிஸ் பண்றேன் - குல்தீப் யாதவ்
ஸ்டம்பிற்கு பின்னால் நின்று தோனி கூறும் அறிவுரைகளை ரோம்ப மிஸ் பண்றேன் என சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
ஒரு சமயத்தில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக வலம் வந்தவர் குல்தீப் யாதவ். ஆனால் அவர் தற்போது ஒரு போட்டியிலாவது விளையாட மாட்டோமா என்ற ஏக்கத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தானிடம் இந்தியா படுதோல்வி அடைந்த பிறகு, 'அணிக்கு இனி ரிஸ்ட் (மணிக்கட்டு) ஸ்பின்னர்கள் தான் தேவை' என்று கோச் ரவி சாஸ்திரி சொல்ல, மெல்ல மெல்ல அஷ்வினும், ஜடேஜாவும் ஓரங்கட்டப்பட, அணிக்குள் யுவேந்திர சாஹலும், குல்தீப் யாதவ்வும் ஆளுமை செலுத்தத் தொடங்கினர்.
Trending
சாஸ்திரி சொன்னது சரி தான் போல.. என்று அனைவரும் நினைக்கும் அளவுக்கு, இருவரும் மாஸ் காட்ட 'ஸ்பின் ட்வின்ஸ்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் கனவு தற்போது கனவாகவே மாறியுள்ளது.
குறிப்பாக, குல்தீப் யாதவ்வின் ஃபார்ம் குறையத் தொடங்கியது. அவரது பந்துகளை பேட்ஸ்மேன்கள் விளாசத் தொடங்கினர். இதனால், அவரே நம்பிக்கை இழந்த அவர், தற்போது மீண்டும் இந்திய அணிக்காக விளையாட மாட்டோமா என்ற கேள்விக்கு உள்ளாகியுள்ளார்..
சச்சின், தோனி, கோலி, ஜாகீர் என்று இதுவரை எத்தனையோ ஹீரோக்கள் கூட தங்கள் ஃபார்மை இழந்து தடுமாறி, தள்ளாடி, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து, பிறகு கடுமையாக போராடி களத்தில் தங்கள் பலத்தை நிரூபித்தவர்கள் தான்.
ஆனால், அப்படியொரு மாஸ் 'பவுன்ஸ் பேக்' தான் குல்தீப்பிடம் மிஸ் ஆகிறது. அவர் அவுட் ஆஃப் ஃபார்ம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் அவரால் மீண்டு வர முடியவில்லை.
இந்த சூழலில் பத்திரிக்கை ஒன்றிர்க்கு பேட்டியளித்த குல்தீப், 'நீங்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடினால், உங்களது தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும். அதுவே தொடர்ந்து வெளியே உட்கார்ந்திருந்தால், அது நிலையை மேலும் மோசமாக்கும். கடந்த பிப்ரவரி மாதம், சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான் விளையாடிய போது, பெரும் மன அழுத்தத்தை உணர்ந்தேன். ஒன்றும் நடக்கவில்லை. போன வருடத்தை விட இந்த வருடம் மேலும் எனக்கு மோசமாகிவிட்டது. இது எனக்கு போதாத காலம்.
ஸ்டெம்ப்புகளுக்கு பின்னால் நின்று ஆலோசனை அளிக்கும் அனுபவம் வாய்ந்த தோனி போன்ற ஒருவரை நாங்கள் ரோம்பா மிஸ் செய்கிறோம். அவருடைய அனுபவத்தை நாங்கள் மிஸ் செய்கிறோம். இப்போது ரிஷப் அந்த இடத்தில் இருக்கிறார். அனுபவங்களைப் பெற்று எதிர்காலத்தில் அவரும் டிப்ஸ் வழங்குவார் என நம்புகிறேன்" என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இதனால் வரவுள்ள இலங்கை அணிக்கெதிரான ஒருநாள், டி20 தொடரிலாவது குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா? என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now