
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கான, இரு அணிகளும் தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி, அடுத்த சில தினங்களில் பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளது. மேலும், இந்த போட்டியை தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி ஆடவுள்ளது.
இந்த இரு தொடர்களுக்கு, 20 வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்திருந்த நிலையில், 4 வீரர்களையும் கூடுதல் வீரர்களாக அறிவித்திருந்தது. ஆனால், இந்த தொடர்களுக்கான இந்திய அணியில், சில வீரர்கள் இடம்பெறாமல் போனது பற்றி, பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். ஹர்திக் பாண்டியா, பிரித்வி ஷா, குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் யாரும் தேர்வாகவில்லை.