
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்
தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி
இன்று புனேவில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணிக்காக தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக அரை சதம்
பதிவு செய்து கிரிக்கெட் வீரர் குணால் பாண்டியா புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் போட்டியில் குறைந்த பந்துகளில் அரை சதம்
கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதனை அவர் வெறும் 26 பந்துகளில்
கடந்தது குறிப்பிடத்தக்கது.
இக்கட்டான சூழலில் களத்திற்கு வந்த குணால் பாண்டியா, ராகுலுடன் பேட்டிங்கில் வலுவான
கூட்டணி அமைத்து, இந்தியா அணி 317 ரன்களைக் குவிக்க உதவினார். ‘இந்த இன்னிங்ஸை
அப்பாவுக்கு அர்ப்பணிக்கிறேன்’ என குருணால் ஆட்டத்திற்கு பிறகு தெரிவித்துள்ளார்.