
Kyle Jamieson Opts Out Of T20I Series Against India (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவதற்காக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டி20 தொடரிலிருந்து விலகினார்.
இதன் காரணமாக டிம் சௌதி நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் வில்லியம்சன் கூறிய அதே காரணத்தைக் கூறி நியூசிலாந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன்னும் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.