Advertisement

பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்த்து பெஷாவர் ஸால்மி அணி விளையாடவுள்ளது.

Advertisement
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 24, 2024 • 08:45 PM

பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்த்து பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணி விளையாடவுள்ளது. நடப்பு பிஎஸ்எல் தொடரில் பெஷாவர் ஸால்மி அணி அடுத்தடுத்து இரு தோல்விக்கு பின் கடந்த போட்டியில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதனால் அதே உத்வேகத்துடன் இப்போட்டியை வெல்லும் முனைப்பில் அந்த அணி விளையாடும். மறுபக்கம் லாகூர் கலந்தர்ஸ் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் நிச்சயம் தங்களது முதல் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 24, 2024 • 08:45 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - லாகூர் கலந்தர்ஸ் vs பெஷாவர் ஸால்மி 
  • இடம் - கடாஃபி கிரிக்கெட் மைதானம், லாகூர்
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ர் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் கடாஃபி கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. மேலும் இந்த மைதானத்தின் பேட்டிங் சராசரி 162 ரன்களாக உள்ளது. இதனால் நிச்சயம் இப்போட்டி அதிக ரன்கள் கொண்ட போட்டியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 18
  • பெஷாவர் ஸால்மி - 10
  • லாகூர் கலந்தர்ஸ் - 08

உத்தேச லெவன்

லாகூர் கலந்தர்ஸ்: ஃபகர் ஸமான், சாஹிப்சாதா ஃபர்ஹான், ரஸ்ஸி வான் டெர் டுசென், அப்துல்லா ஷஃபிக், சிக்கந்தர் ரஸா, ஜார்ஜ் லிண்டே, டேவிட் வைஸ், ஜஹந்தத் கான், ஷஹீன் அஃப்ரிடி (கே), ஹாரிஸ் ரவுஃப், ஸமான் கான்

பெஷாவர் ஸால்மி: சைம் அயூப், பாபர் அசாம் (கேட்ச்), முகமது ஹாரிஸ் (வி.கே.), ஹசீபுல்லா கான், ரோவ்மன் பவல், ஆசிப் அலி, பால் வால்டர், லூக் வூட், ஆரிப் யாகூப், நவீன்-உல்-ஹக், சல்மான் இர்ஷாத்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: சாஹிப்சாதா ஃபர்ஹான், முகமது ஹாரிஸ்
  • பேட்டர்ஸ்: பாபர் ஆசாம் (துணைக்கேப்டன்), ஃபகர் ஸமான், ரஸ்ஸி வான் டெர் டுசென், 
  • ஆல்ரவுண்டர்கள்: சோயிப் மாலிக், சிக்கந்தர் ரஸா(கேப்டன்), ரோவ்மன் பாவெல்
  • பந்துவீச்சாளர்கள்: லுக் வுட், ஷஹீன் அஃப்ரிடி, ஸமான் கான்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement