
Lahore Qalandars become champions of PSL for the first time (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 69 ரன்களையும், ஹேரி ப்ரூக் 41 ரன்களையும் சேர்த்தனர். சுல்தான்ஸ் அணி தரப்பில் ஆசிஃப் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.