PSL 2023: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்தது லாகூர் கலந்தர்ஸ்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஷாஹீன் அஃப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ், சர்ஃப்ராஸ் அஹ்மத் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்கொண்டது.
அதன்படி கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணியில் மிர்ஸா தாஹிர் - ஃபகர் ஸமான் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
Trending
பின் 22 ரன்களில் ஃபகர் ஸமான் ஆடமிழக்க, அவரைத்தொடர்ந்து மிர்ஸா தஹிர் 31 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய காம்ரன் குலாம் 21 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய ஷாய் ஹோப் - ஹுசைன் தாலத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாய் ஹோப் 47 ரன்களில் ஆட்டமிழக்க, ஹுசைன் தாலத் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து டேவிஸ் வைஸும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினார். இறுதியில் சிக்கந்தர் ரஸா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 பந்துகளில் 32 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களைக் குவித்தது. குயிட்டா கிளாடியேட்டர்ஸ் தரப்பில் ஓடியன் ஸ்மித்,கியுஸ் அகம்து தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now