Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2022: மும்பையை அலறவிட்டது டெல்லி கேப்பிட்டல்ஸ்!

ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Advertisement
Lalit, Axar Guide Delhi Capitals To A 4 Wicket Win Over Mumbai Indians
Lalit, Axar Guide Delhi Capitals To A 4 Wicket Win Over Mumbai Indians (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 27, 2022 • 07:44 PM

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 27, 2022 • 07:44 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச தீர்மானித்து, மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தார். 

Trending

அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதனால் பவர்பிளே முடிவில் அந்த அணி 53 ரன்களைச் சேர்த்தது.

பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 41 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்துவந்த அன்மோல்ப்ரீத் சிங், திலக் வர்மா 22 ரன்களிலும் குல்தீப் யாதவிடம் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் கீரன் பொல்லார்ட் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷான் அரைசதம் கடந்து அசத்தினார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 81 ரன்களையும், ரோஹித் சர்மா 41 ரன்களையும் சேர்த்தனர். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பிரித்வி ஷா - டிம் செய்ஃபெர்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் செய்ஃபெர்ட் 21 ரன்களிலும், பிரித்வி ஷா 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

பின்னர் களமிறங்கிய மந்தீப் சீங், ரிஷப் பந்த், ரோவ்மன் பாவெல், ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின் ஜோடி சேர்ந்த ஜோர்ந்த லலித் யாதவ் - ஷர்துல் தாக்கூர் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் அக்ஸர் படேல் அதிரடியாக விளையாடி 38 ரன்களைச் சேர்த்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement