
Lanka Premier League 2021 to Start From December 5 (Image Source: Google)
ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இலங்கை கிரிக்கெட் வாரியமும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரை கடந்தாண்டு அறிமுகம் செய்தது.
அறிமுக சீசன் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் திசாரா பெரேரா தலைமையிலான ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இத்தொடருக்கான இரண்டாவது சீசன் தேதி மற்றும் மைதானங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.