மீண்டும் மும்பை இந்தியன்ஸில் இணையும் லசித் மலிங்கா!
இலங்கை அணியின் முன்னாள் வீரர் லாசித் மலிங்கா அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து வீரர் ஷேன் பாண்ட் செயல்பட்டு வருகிறார். கடந்த 9 ஐபிஎல் சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அவர் பணியாற்றி வருகிறார். தற்போது அடுத்த ஐபிஎல் சீசனில் அவருக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரான லாசித் மலிங்கா பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்கா நியமிக்கப்படுவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படும் ஷேன் பாண்டின் ஒப்பந்த காலம் இன்னும் முடியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மலிங்கா 139 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் மொத்தமாக 195 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
Trending
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் வரிசையில் மலிங்கா 6ஆவது இடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் மொத்தமாக 5 முறை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதில் 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு அங்கமாக மலிங்கா இருந்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பை அணியின் பந்துவீச்சு ஆலோசராக செயல்பட்ட அவர் 2019 ஆம் ஆண்டு மீண்டும் அணியில் ஒரு வீரராக இணைந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக மலிங்காவின் கடைசி ஓவர் அமைந்தது. பின் 2021 ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்த மலிங்கா 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now