மீண்டும் திரும்புகிறார் மலிங்கா!
இலங்கை அணிக்கு முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா மீண்டும் திரும்பியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இலங்கை அணிக்குப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ரசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்காக இலங்கை அணிக்கு பந்துவீச்சுப் பயிற்சியாளராக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் டி20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக ரசித் மலிங்கா நியமிக்கப்பட்டிருந்தார். இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2ஆவது இடத்தைப் பிடித்தது. இதையடுத்து, இலங்கை அணி மலிங்காவை திரும்ப அழைத்துள்ளது.
Trending
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியி்ட்ட அறிவிப்பில் “ இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர், டி20, ஒருநாள் அணியின் முன்னாள் கேப்டன் ரசித் மலிங்காவை ஆஸ்திரேலியத் தொடருக்கான இலங்கை அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்தப் பயணத்தில் இலங்கை பந்துவீச்சாளர்ளுக்கு பயிற்சி அளிப்பது, தொழில்நுட்பரீதியாக ஆலோசனைகள் வழங்குவது, களத்தில் எவ்வாறு திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்குவார். மலிங்காவின் பரந்த அனுபவம், குறிப்பாக டி20 போட்டியில் டெத்பவுலிங் அனுபவம் நிச்சயம் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான தொடரில் மலிங்காவின் வழிகாட்டல் உதவியாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இலங்கை அணிக்கும் இதேபோன்ற பயிற்சியாளராக மலிங்கா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now