
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனால் ஐபிஎல் தொடரின் போது வீரர்களிடையே கரோனா பரவியதையடுத்து, டி20 உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்தும் திட்டத்தை கைவிட்டது ஐசிசி.
ஆனால் தற்போது வரை உலக கோப்பை தொடர் எந்த நாட்டில் நடைபெறும் என எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஐசிசி வெளியிடவில்லை. இதற்கிடையில் இலங்கை அணியானது, இந்த உலகக் கோப்பை தொடருக்காக அந்த அணியின் மிகச் சிறந்த பந்து வீச்சாளரான லசித் மலிங்காவை மீண்டும் அணிக்குள் கொண்டு வரும் திட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பேசிய இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் விக்ரமசிங்கே, டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் நிச்சயமாக லஷித் மலிங்கா இருக்கிறார். 2021 மற்றும் 2022 என அடுத்தடுத்து வரும் இரண்டு டி20 உலகக் கோப்பையில் அவரை இலங்கை அணியில் விளையாட வைக்கும் முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். லஷித் மலிங்காவின் திறமையைப் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். மேலும் எங்கள் அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டதை என்றைக்கும் மறக்க மாட்டோம். எங்களுடைய முடிவு குறித்து ஓரிரு நாள்களில் மலிங்காவிடம் பேச உள்ளோம்” என்று தெரிவித்தார்.