
Cricket Image for மகளிர் கிரிக்கெட்: டி20 தொடரையும் கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா! (South Africa Women's Cricket Team (Image Source))
இந்தியா, தென்ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவெடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தானா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஷாபாலி வர்மா - ரிச்சா கோஷ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷபாலி வர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 47 ரன்களையும், ரிச்சா கோஷ் 44 ரன்களையும் சேர்த்தனர்.