
'Left is always right': Pathan names 3 out-of-favour India fast bowlers who can compete for one plac (Image Source: Google)
கடந்த 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல், சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது. அந்த டி20 உலக கோப்பையுடன் விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.
ரோஹித்தின் கேப்டன்சியில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகளையும் ஒயிட்வாஷ் செய்து 3-0 என டி20 தொடரை வென்றது இந்திய அணி.
டி20 உலக கோப்பைக்கான தயாரிப்பில் இந்திய அணி பல வீரர்களை பரிசோதித்துவருகிறது. பேட்டிங்கில் ஒரு இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.