
Leg spinner Adam Zampa returns to Australia squad for ODI series vs Kiwis, Zimbabwe (Image Source: Google)
ஆஸ்திரேலியா அணி ஆகஸ்டு மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அதை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கு எதிரான ஆஸ்திரேலியா ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டது.
இதில் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெறவில்லை. அவரது மனைவிக்கு குழந்தை பிறந்த காரணத்தால் அந்த தொடரில் இருந்து விலகினார்.
இந்நிலையில் நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் மீண்டும் ஜம்பா இணைந்துள்ளார். அதே நேரத்தில் ஆஷ்டன் அகர், சீன் அபோட் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.