-mdl.jpg)
உள்ளூரில் புகழ்பெற்ற ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் நடப்பாண்டு சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணியில், வழக்கம்போல தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன், என்.ஜெகதீசன் ஆகியோர் தொடர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள். இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்கவே முடியவில்லை. 50,100,150,200 என இந்த பார்ட்னர்ஷிப் தொடர்ந்து ரன்களை குவித்து வந்தது.
இறுதியில் இருவரும் அதிரடியாக சதம் கடந்ததால், 30 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 280/0 ரன்களை சேர்த்தது. இதன்பிறகும் இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியவில்லை. தொடர்ந்து சிக்ஸர், பவுண்டரிகள் பறந்துகொண்டேதான் இருந்தது. இதற்கு ஒரு முடிவே இல்லையா என அருணாச்சல பிரதேச பந்துவீச்சாளர்கள் புலம்பும் அளவுக்கு பந்துகள் தொடர்ந்து பவுண்டரிகளை தொட்டுதொட்டு வந்தது.