
LLC 2022: World Gaints beat Asia Lions by 7 wickets (Image Source: Google)
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் -உலக ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆஸ்கர் ஆஃப்கான் 41 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஜெயண்ட்ஸ் அணிக்கு கெவின் பீட்டர்சன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அவருடன் இணைந்து கெவின் ஓ பிரையனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் பீட்டர்சன் அரைசதம் கடந்தார்.