
LLC 2022: World Gaints restricted Asia Lions by 149 runs (Image Source: Google)
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 5ஆவது போட்டியில் ஆசியா லையன்ஸ் - உலக ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆசிய லையன்ஸ் அணியில் தில்சன் 17, ஜெயசூர்யா 3, தரங்கா 22, என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார்.
அடுத்து களமிறங்கிய ஆஸ்கர் ஆஃப்கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 ரன்னில் ஆஃப்கானும் ஆட்டமிழந்தார்.