Advertisement

எல்எல்சி 2023: சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!

சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 03, 2023 • 21:39 PM
எல்எல்சி 2023: சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
எல்எல்சி 2023: சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி! (Image Source: Google)
Advertisement

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜெஸ்ஸி ரைடர் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின் இணைந்த உபுல் தரங்கா - கோஸ்வாமி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் 34 ரன்களில் தரங்காவும், 24 ரன்களுக்கு கோஸ்வாமியும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ராஸ் டெய்லர், டி சில்வா, பிஷ்னோய், பவன் நெஹி என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. 

Trending


இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் துருவ் ரவல் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த கெவின் ஓ பிரையன் - அபிஷேக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் கெவின் ஓ பிரையன் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடி காட்டிய அபிஷேக் அரைசதம் கடந்ததுடன் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 81 ரன்களை விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார். 

பின் சிராக் குரானா 22 ரன்களையும், எல்டன் சிகும்புரா 21 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement