
London Mayor Wants To Host Indian Premier League In The City (Image Source: Google)
உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கோலகலமாக நேற்று தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் டி20 போட்டிகளை இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடத்த வேண்டும் என லண்டன் மேயர் ஷாதிக் கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷாதிக்,“ஐபிஎல் ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் தொடர். இத்தொடரில் எம்.எஸ்.தோனி, விராட் கோலி போன்ற தலை சிறந்த வீரர்கள் விளையாடுகின்றனர். அதனால் இப்போட்டிகள் லார்ட்ஸ், சர்ரே, பர்மிங்ஹாம் ஆகியா இடங்களில் நடத்தப்படவேண்டும் என்பது எனது விருப்பம்.