
Longest sixes in IPL 2022 (Image Source: Google)
குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் லிவிங்ஸ்டன், 10 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்து தனது அணி சுலபமாக வெற்றி பெற வழிவகுத்தார். இந்த ஆட்டத்தில் அவர் அடித்த சிக்ஸர் ஒன்று அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.
16ஆவது ஓவரை ஷமி வீசியபோது முதல் பந்தில் இமாலய சிக்ஸரை அடித்தார் லிவிங்ஸ்டன். அது 117 மீட்டர் தூரத்துக்குச் சென்றது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக தூரத்துக்கு சென்ற சிக்ஸர் இதுதான். இதற்கு முன்பு பிரெவிஸ் 112 மீ. தூரத்துக்கு சிக்ஸர் அடித்ததே முதலிடத்தில் இருந்தது.
அதிக தூரத்துக்கு சிக்ஸர் அடித்த வீரர்களில் முதல் ஐந்து இடங்களில் மூன்று இடங்கள் லிவிங்ஸ்டனுக்குக் கிடைத்துள்ளன.