
சூப்பர் 12 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதவுள்ளன. இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது.
உலகக் கோப்பைப் போட்டிகளில் (50 ஓவர், டி20) இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கு முன்பு 12 முறை மோதியதில் அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 7 முறையும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 5 முறையும் இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம், “பாகிஸ்தான் அணியில் இடம்பெறும் 12 பேரை இன்று அறிவிக்கிறோம். 11 வீரர்களின் பெயர்கள் நாளை அறிவிக்கப்படும். உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தொடர்ந்து தோற்றது என்பது எங்களைக் கடந்த ஒன்று. ஆட்ட நாளில் எங்கள் திறமையைப் பயன்படுத்தி வெற்றி பெற எண்ணுகிறோம். எந்த ஒரு சாதனையும் உடைக்கப்பட வேண்டியதே.