எல்பிஎல் 2021: நடப்பு சாம்பியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது கலே கிளாடியேட்டர்ஸ்!
ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கெதிரான லங்கா பிரீமியர் லீக் முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கலே கிளாடியேட்டர்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
லங்கா பிரீமியர் லீக் தொடரில்நேற்று நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் ஜாஃப்னா கிங்ஸ் - கலே கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கலே கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸ் - குனத்திலகா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தனர்.
Trending
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கலே கிளாடியேட்டர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்தது. இதில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 85 ரன்களையும், குணத்திலகா 55 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஜாஃப்னா கிங்ஸ் அணி ஆரம்பத்திலேயே ஃபெர்னாண்டோ, கேட்மோர், பண்டாரா, சோயிப் மாலி, திசாரா பெரேரா என விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுள்ளா குர்பாஸ் அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் 59 ரன்களில் ஆட்டமிழக்க, ஜாஃப்னா அணியின் தோல்வி உறுதியானது.
இதனால் அந்த அணி 16.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கலே அணி தரப்பில் நுவான் துஷாரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் கலே கிளாடியேட்டர்ஸ் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணியை வீழ்த்தியதுடன், இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now