
LPL 2021: Rajapaksa stars as Galle Gladiators win tournament opener (Image Source: Google)
இலங்கையின் உள்ளூர் டி20 லீக் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் நேற்று தொடங்கியது. சீசனின் முதல் போட்டியில் கலே கிளேடியேட்டர்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் முதலில் பந்துவீசியது. அதன்படி களமிறங்கிய கலே கிளாடியேட்டர்ஸ் அணி பனுகா ராஜபக்ஷ, சமித் படேல் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ராஜபக்ஷ 56 ரன்களையும், சமித் படேல் 42 ரன்களையும் சேர்த்தனர். ஜாஃப்னா அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.