எல்பிஎல் 2023 எலிமினேட்டர்: முகமது ஹாரிஸ் அதிரடி; ஜாஃப்னா அணிக்கு 189 டார்கெட்!
ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பி லௌவ் கண்டி அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பி லௌவ் கண்டி - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கண்டி அணிக்கு முகமது ஹாரிஸ் - ஃபகர் ஸமான் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் ஹாரிஸுடன் இணைந்த தினேஷ் சண்டிமலும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
Trending
பின் 41 ரன்களில் சண்டிமல் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த முகமது ஹாரிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வநிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 79 ரன்களைச் சேர்த்திருந்த முகமது ஹாரிஸும் விக்கெட்டை இழந்தார்.
இறுதில் பி லௌவ் கண்டி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களைச் சேர்த்துள்ளது. ஜாஃப்னா கிங்ஸ் அணி தரப்பில் நுவான் துஷாரா 4 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா, அலெலா கருரணரத்னே தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
Win Big, Make Your Cricket Tales Now