
இலங்கையில் நடைபெற்றுவரும் 4ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் லீக் போட்டியில் கலே டைட்டன்ஸ் - தம்புலா ஆரா அணிகள் பலபப்ரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தம்புலா அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கலே டைட்டன்ஸ் அணியில் பனுகா ராஜபக்ஷா ரன்கள் ஏதுமின்றியும், லிட்டன் தாஸ் 8 ரன்களுக்கும், ஷாகிப் அல் ஹசன் 19 ரன்களுக்கும், கேப்டன் ஷனகா 12 ரன்களிலும், நஜிபுல்லா ஸத்ரான் 2 ரன்களிலும், லஹிரு சமரக்கூன் 15 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இருப்பினும் மறுபக்கம் மற்றொரு தொடக்க வீரரான லசித் க்ரூஸ்புலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 80 ரன்களைச் சேர்த்திருந்த க்ரூஸ்புலேவும் விக்கெட்டை இழக்க, 20 ஓவர்களில் கலே டைட்டன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தம்புலா தரப்பில் ஹெய்டன் கெர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.