Advertisement

எல்பிஎல் 2023: ஜாஃப்னாவை 129 ரன்களில் கட்டுப்படுத்தியது தம்புலா!

தம்புலா அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜாஃப்னா அணி 130 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 01, 2023 • 17:00 PM
எல்பிஎல் 2023: ஜாஃப்னாவை 129 ரன்களில் கட்டுப்படுத்தியது தம்புலா!
எல்பிஎல் 2023: ஜாஃப்னாவை 129 ரன்களில் கட்டுப்படுத்தியது தம்புலா! (Image Source: Google)
Advertisement

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 4ஆவது லீக் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் - தம்புலா ஆரா அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ர ஜாஃப்னா அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. 

அதன்படி காளமிறங்கிய அந்த அணிக்கு சரித் அசலங்கா - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தாஹித் ஹிரிடோய் 24 ரன்களுக்கும், பிரியமால் பெரேரா 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Trending


இருப்பினும் தொடக்க வீரராக களமிறங்கிய சரித் அசலங்கா அரைசதம் கடந்தார். பின் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 56 ரன்களை எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் திசாரா பெரேரா 6, ஹர்டுஸ் 4 ரன்கள் என விக்கெட்டை இழந்தனர். அதனைத்தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லரும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை எடுத்தது. தம்புலா அணி தரப்பில் பினுரா ஃபெர்னாண்டோ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி தம்புலா அணி விளையாடவுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement