
LPL: Vandersay takes 6 wickets as Colombo Stars defeat Kandy Warriors (Image Source: Google)
லங்கா பிரீமிய லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் - கண்டி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கண்டி அணி முதலில் பந்துவீசியது.
இதையடுத்து விளையாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி குசால் பெரேரா, தனஞ்செய டி சில்வா, சண்டிமல் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக குசால் பெரேரா 58 ரன்களையும், தினேஷ் சண்டிமல் 44 ரன்களையும் சேர்த்தனர்.