Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan April 11, 2024 • 15:59 PM
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Advertisement

இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்த்து, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுள்ளது. மறுபக்கம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஒரு வெற்றி நான்கு தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனல பலம் வாய்ந்த லக்னோ அணியை வீழ்த்தி டெல்லி அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த சீசனின் மூன்றாவது போட்டி இதுவாகும். மேலும் இங்கு இரண்டு வகையான பிட்சுகள் உள்ளது. ஆனாலும் பெரும்பாலான போட்டிகளில் சுழற்பந்துவீச்சுக்கு இந்த மைதானம் சாதகமானதாக இருந்திருக்கிறது. மேலும் இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரியானது 151 ரன்களாக உள்ளது. இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்யலாம்.

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 03
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 00

உத்தேச லெவன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்னால் பாண்டியா, ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், யாஷ் தாக்கூர், மயங்க் யாதவ்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, டேவிட் வார்னர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரிஷப் பந்த் (கேப்டன்), அக்ஸர் படேல், லலித் யாதவ், ஜெய் ரிச்சர்ட்சன், அண்ட்ரிச் நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது..

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக், கேஎல் ராகுல், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ரிஷப் பந்த்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர், பிரித்வி ஷா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்ரவுண்டர் - மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல் (துணை கேப்டன்), குர்னால் பாண்டியா
  • பந்து வீச்சாளர் - யாஷ் தாக்கூர்.

LSG vs DC IPL 2024 Dream11 Prediction, Today Match LSG vs DC, LSG vs DC Dream11 Team, Fantasy Cricket Tips, LSG vs DC Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Lucknow Super Giants vs Delhi Capitals

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement