Advertisement

ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan April 06, 2024 • 14:50 PM
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப் (Image Source: Cricketnmore)
Advertisement

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று 3ஆவது வெற்றியைப் பதிவுசெய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - லாக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் - ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேலும் இந்த இரு வெற்றிக்கும் முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தது அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தான். குறிப்பாக 150 கிமீ வேகத்தில் சராசரியாக பந்துவீசும் மயங்க் யாதவ், தொடர்ந்து எதிரணி பேட்டர்களை நிலை குழைய செய்வதுடன், அணிக்கு தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி, ரன்களை கட்டுப்படுத்தும் திறனையும் பெற்றுள்ளது அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

அவருடன் யாஷ் தாக்கூர், மணிமாறன் சித்தார்த், ரவி பிஸ்னோய் போன்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருவது நிச்சயம் எதிரணிக்கு மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன் போன்ற வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான தொடக்கத்தை பெறும் கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டொய்னிஸ் போன்ற வீரர்கள் நிலைத்து நின்று விளையாடினால் நிச்சயம் லக்னோ அணியின் வெற்றியை தடுப்பது என்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனில் விளையாடிய நான்கு போட்டிகளில் தலா 2 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியின் விளிம்பில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது, இறுதி நேரத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் தோல்வியிலிருந்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முயற்சியில் அந்த அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அணியின் பேட்டிங்கில் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

அதேசமயம் கடந்த போட்டியில் விளையாடிய கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், விருத்திமான் சஹா போன்ற வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதன் காரணமாக இப்போட்டியில் சில மாற்றங்கள் நிகழலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஷாரூக் கான், டேவிட் மில்லர் போன்ற வீரர்கள் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரையில் மொஹித் சர்மா, நூர் அஹ்மத், ரஷித் கான் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும், உமேஷ் யாதவ், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் போன்ற வீரர்கள் ரன்களை கட்டுப்படுத்த தவறி வருவது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

பிட்ச் ரிப்போர்ட்

ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த சீசனின் இரண்டாவது போட்டி இதுவாகும். மேலும் இங்கு இரண்டு வகையான பிட்சுகள் உள்ளது. ஆனாலும் பெரும்பாலான போட்டிகளில் சுழற்பந்துவீச்சுக்கு இந்த மைதானம் சாதகமானதாக இருந்திருக்கிறது. மேலும் இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரியானது 151 ரன்களாக உள்ளது. இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்யலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • குஜராத் டைட்டன்ஸ் - 04
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் -00

நேரலை 

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ், மணிமாறன் சித்தார்த்.

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில் (கேப்டன்), கேன் வில்லியம்சன், சாய் சுதர்ஷன், விஜய் சங்கர், ராகுல் திவேத்தியா, அஸ்மதுல்லா ஓமர்சாய், உமேஷ் யாதவ், ரஷித் கான், நூர் அஹ்மத், மோஹித் சர்மா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - விருத்திமான் சாஹா, குயின்டன் டி காக் (கேப்டன்), கேஎல் ராகுல், நிக்கோலஸ் பூரன்
  • பேட்ஸ்மேன்கள் - ஷுப்மன் கில் (துணை கேப்டன்), சாய் சுதர்ஷன்
  • ஆல்ரவுண்டர் - மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஸ்மத்துல்லா ஒமர்சாய்
  • பந்துவீச்சாளர்கள் - மோஹித் சர்மா, நூர் அகமது, மயங்க் யாதவ்.

LSG vs GT IPL 2024 Dream11 Prediction, Today Match LSG vs GT, LSG vs GT Dream11 Team, Fantasy Cricket Tips, LSG vs GT Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Lucknow Super Giants vs Gujarat Titans

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement