Advertisement

ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan April 29, 2024 • 14:13 PM
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Advertisement

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், மீதமிருக்கும் மூன்று இடங்களை எந்த அணிகள் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் நாளை நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது, கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த தவறிவரும் மும்பை அணியானது இனிவரும் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த சீசனின் 6ஆவது போட்டி இதுவாகும். மேலும் இங்கு இரண்டு வகையான பிட்சுகள் உள்ளது. ஆனாலும் பெரும்பாலான போட்டிகளில் சுழற்பந்துவீச்சுக்கு இந்த மைதானம் சாதகமானதாக இருந்திருக்கிறது. மேலும் இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரியானது 151 ரன்களாக உள்ளது. இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 03
  • மும்பை இந்தியன்ஸ் - 01

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்னால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர், நுவான் துஷாரா.

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, பியூஷ் சாவ்லா, லூக் வுட், ஜஸ்பிரித் பும்ரா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், இஷான் கிஷன்
  • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா
  • ஆல்-ரவுண்டர் - மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), குர்னால் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தாக்கூர்.

LSG vs MI Dream11 Prediction, Today Match Prediction, Today Match LSG vs MI, LSG vs MI Dream11 Team, Fantasy Cricket Tips, LSG vs MI Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Lucknow Super Giants vs Mumbai Indians

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement