Advertisement

ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

நாளை நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan April 26, 2024 • 16:26 PM
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Advertisement

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 44ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து, புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் இருக்கும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த சீசனில் இருபெரும் பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த சீசனின் நான்காவது போட்டி இதுவாகும். மேலும் இங்கு இரண்டு வகையான பிட்சுகள் உள்ளது. ஆனாலும் பெரும்பாலான போட்டிகளில் சுழற்பந்துவீச்சுக்கு இந்த மைதானம் சாதகமானதாக இருந்திருக்கிறது. மேலும் இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரியானது 151 ரன்களாக உள்ளது. இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 01
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 03

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கே), மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்னால் பாண்டியா, மேட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கே), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்..

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), கேஎல் ராகுல், நிக்கோலஸ் பூரன்
  • பேட்டர்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர்கள்: மார்கஸ் ஸ்டோய்னிஸ் (துணை கேப்டன்), ரியான் பராக், குர்னால் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள்: யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா, மொஹ்சின் கான்

LSG vs RR Dream11 Prediction, Today Match Prediction, Today Match LSG vs RR, LSG vs RR Dream11 Team, Fantasy Cricket Tips, LSG vs RR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Lucknow Super Giants vs Rajasthan Royals

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement