Advertisement

ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 10, 2022 • 14:22 PM
Lucknow Super Giants vs Gujarat Titans, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Proba
Lucknow Super Giants vs Gujarat Titans, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Proba (Image Source: Google)
Advertisement

 ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் தான் இந்த சீசனில் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் - எம்சிஏ மைதானம், புனே
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளுமே இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முறையே முதல் மற்றும் இரண்டாமிடத்தில் உள்ளன.

புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கான போட்டியில் இன்று இந்த 2 அணிகளும் மோதுகின்றன. இந்த சீசனின் தொடக்கத்தில் இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இதனால் முந்தைய போட்டிக்கான தோல்விக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பழித்தீர்க்கும் வகையில் விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

உத்தேச லெவன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயிண்டன் டி காக், கேஎல் ராகுல் (கே), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், மோசின் கான்.

குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில், ரிதிமான் சஹா, ஹர்திக் பாண்டியா (கே), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், பிரதீப் சங்வான், அல்ஸாரி ஜோசஃப், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - கேஎல் ராகுல், குயின்டன் டி காக், விருத்திமான் சாஹா
  • பேட்டர்ஸ் - தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஹர்திக் பாண்டியா
  • ஆல்-ரவுண்டர்கள் - ராகுல் தெவாடியா
  • பந்துவீச்சாளர்கள் - அவேஷ் கான், மொஹ்சின் கான், ரஷித் கான், முகமது ஷமி


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement