ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி,நடப்பு சீசன் தொடக்கத்தில் முதல் 7 போட்டியையும் தோல்வியை தழுவி சோகமான சாதனையை படைத்துள்ளது.
இன்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ள லக்னோ அணியும், கடைசி இடத்தில் உள்ள மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு சீசனில் முதல் முறையாக மும்பை அணி, தங்களது சொந்த மைதானமான வான்கடேவில் களமிறங்குகிறது. இதனால், மும்பை வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
- இடம் - வான்கடே மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
மும்பை அணி, ஐபிஎல் வரலாற்றில் சச்சின் பிறந்தநாளன்று 4 முறை மோதியுள்ளது. இதில் 2011ஆம் ஆண்டு டெல்லியுடனும், 2013ஆம் ஆண்டு கொல்கத்தாவுடனும் மும்பை அணி வென்றது. ஆனால் 2017ஆம் ஆண்டு புனேவுடனும், 2018ஆம் ஆண்டு ஹைதராபாத் அணியுடனும் மும்பை தோல்வியை தழுவியது. தற்போது சச்சின் பிறந்தநாளன்று 5வது முறையாக மும்பை களமிறங்குகிறது.
மும்பை அணியில் பேட்டிங், பவுலிங் என இரண்டுமே குறையாக தென்படுகிறது. பேட்டிங்கில் கேப்டன் ரோஹித், இஷான் கிஷன் நல்ல தொடக்கத்தை அளித்தால் மட்டுமே மும்பையால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும். ஒரு பக்கம், விராட் கோல சொதப்புவதும், மறுபக்கம் ரோஹித் சொதப்புவதும், ரசிகர்களை கவலை அடைய செய்தது.
மும்பை அணியின் பலமாக பார்க்கப்படும் பும்ராவே இம்முறை பந்துவீச்சில் சோபிக்கவில்லை. 2020ஆம் ஆண்டு 20 விக்கெட் மற்றும் பவுலிங் அவ்ரேஜ் 14 ஆக இருந்த பும்ராவின் புள்ளிவிவரம், இம்முறை வெறும் 4 விக்கெட் அவ்ரேஜ் 49.5 ஆக உள்ளது. மற்ற வீரர்களை கணக்கில் சேர்த்து கொள்ளவே முடியாது. இந்த தொடரின் மோசமான பந்துவீச்சு எகனாமி வைத்துள்ள அணியின் முதலிடத்தில் மும்பை உள்ளது.
அதேபோல் இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணியில் சமீரா வேறு இருக்கிறார். சமீரா இதுவரை ரோஹித்தை 6 முறை ஆட்டமிழக்க வைத்துள்ளார். பும்ராவின் பந்துவீச்சை கேஎல் ராகுல் எப்போதுமே நன்றாக அடித்து இருக்கிறார். ஆவேஷ் கானும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதனால் லக்னோ அணியை சமாளிப்பது மும்பைக்கு அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.
உத்தேச அணி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கே.எல். ராகுல் (கே), குயின்டன் டி காக், மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய்
மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன் , ரோஹித் சர்மா (கே), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், ரிலே மெரிடித், ஹிருத்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, ஜெய்தேவ் உனத்கட்
ஃபேண்டஸி லெவன்
- கீப்பர் - லோகேஷ் ராகுல், குயின்டன் டி காக்
- பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரோஹித் சர்மா, மணீஷ் பாண்டே
- ஆல்-ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர், மார்கஸ் ஸ்டோய்னிஸ்
- பந்துவீச்சாளர்கள் - அவேஷ் கான், ஜெய்தேவ் உனட்கட், ஜஸ்பிரித் பும்ரா
Win Big, Make Your Cricket Tales Now