
இலங்கை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா. சிஎஸ்கே அணிக்காக 22 போட்டிகளில் விளையாடிய அவர், இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். கடந்த ஐபிஎல் சீசனில் தாமதமாக வந்தாலும், உடனடியாக சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார் மஹீஷ் தீக்ஷனா.
அதிலும் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான மிட்செல் சான்ட்னருக்கு பதிலாக மஹீஷ் தீக்ஷனா சேர்க்கப்பட்டார். இதற்கு பவர் பிளே ஓவர்களில் தீக்ஷனாவின் தாக்கமே காரணமாக அமைந்தது.உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யாராக இருந்தாலும், தீக்ஷனாவின் பவர் பிளேகளுக்கு திணறும் வகையில் பந்துவீசி வருகிறார்.
அந்த வகையில் ஆசியக் கோப்பைத் தொடரில் மகீஷ் தீக்ஷனா சொந்த மண்ணில் களமிறங்குவதால் அபாயகரமான வீரராக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடர் மூலமாக கிடைத்த அனுபவங்கள் குறித்து இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் தீக்ஷனா பகிர்ந்துள்ளார்.