டி20 உலகக்கோப்பை: பேட்டிங்கில் இன்னும் அதிக கவனம் தேவை - மஹ்முதுல்லா
இங்கிலாந்து அணியுடனான தோல்வி குறித்து பேசிய வங்கதேச அணி கேப்டன் மஹ்முதுல்லா பேட்டிங்கில் இன்னும் அதிக கவனம் தேவை என்று தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்கதேச அணிகள் விளையாடின.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, எளிய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் போட்டிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வங்கதேச கேப்டன் மஹ்முதுல்லா நாங்கள் பேட்டிங்கில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் பேட்டிங் செய்த விதம் எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. ஏனெனில் நாங்கள் சிறப்பான பேட்டிங் ஆர்டரைக் கொண்டுள்ளோம். ஆனால் எங்களால் ஸ்கோர் செய்ய முடியவில்லை. அதனால் நாங்கள் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
மேலும் அணியின் தொடக்கம் மற்றும் பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை. அதுவே எங்கள் தோல்விக்கு மிக முக்கிய காரணமாகும். அதனால் இனி வரும் போட்டிகளில் எங்கள் தவறுகளை சரிசெய்ய முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now