X close
X close

கங்குலி பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!

முன்னாள் இந்திய கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் பிறந்தநாளுக்கு, அவரது வீட்டுக்கே சென்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 09, 2021 • 15:08 PM

இந்திய கிரிக்கெட் அணியின் "தாதா" என்று செல்லமாக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி இன்று (ஜுலை.8) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

2000ஆம் ஆண்டு காலக்கட்ட தொடக்கத்தில் சச்சின் எனும் ஒற்றை ஆளுமையை நம்பியிருந்த இந்திய அணிக்கு, கங்குலி கேப்டனானது ஒரு வரப்பிரசாதம் எனலாம். இந்திய அணியில் அவர் விதைத்த விதைகள் ஏராளம். யுவராஜ் சிங், தோனி, ஜாகீர் கான், ஷேவாக் என்று அறிமுகம் செய்த வீரர்கள் நிறைய பேர் சூப்பர் ஸ்டார்ஸ்களாகிவிட்டனர்.

Trending


குறிப்பாக, 2003 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை இந்திய அணி முன்னேறியது, கங்குலி கேப்டன்சியின் உச்சம் எனலாம். இத்தனை பெருமைக்குரிய கங்குலி இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

இந்நிலையில், தற்போது பிசிசிஐ தலைவராகவும் இருக்கும் கங்குலியின் வீட்டிற்கே மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.  

மாலை 5 மணியளவில், கங்குலி வீட்டிற்கு வந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அங்கு கங்குலி மற்றும் அவரது குடும்பத்தினருடன் உரையாடினார். கங்குலியின் வீட்டுக்கு மாநில முதலமைச்சரே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருப்பது மேற்கு வங்கத்தின் முக்கிய செய்தியாக மாறியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now