
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் - மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மான்செஸ்டர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மழை காரணமாக இப்போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 90 பந்துகளாக குறைக்கப்பட்டது.
அதன்படி களமிறங்லிய மான்செஸ்டர் அணியில் பிலிப் சால்ட் 4, ஜோஸ் பட்லர் 2, பவுல் வால்டர் 22, லௌரி எவன்ஸ் 41, ஆஷ் டர்னர் 8 ரன்கள் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஓவர்டன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.
பின் இறுதிவரை அட்டமிழக்காமல் இருந்த ஓவர்டன் 30 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்சர்களை விளாசி 83 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இன்னிங்ஸ் முடிவில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. சூப்பர்சார்ஜர்ஸ் அணி தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.