
Mandhana's 78 Powers Southern Brave To 39 Run Win Over Welsh Fire (Image Source: Google)
தி ஹண்ரட் மகளிர் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் மகளிர் அணி, வெல்ஸ் ஃபையர் மகளிர் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற வெல்ஷ் ஃபையர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சதர்ன் பிரேவ் அணி ஸ்மிருதி மந்தனா, டேனியல் வையட் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால், 100 பந்துகள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 166 ரன்களை சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 78 ரன்களையும், டேனியல் வையட் 53 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வெல்ஷ் ஃபையர் அணி வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறினர். இதனால் அந்த அணியால் 100 பந்துகள் முடிவில் 127 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.