ஐசிசி தரவரிசை: முதலிடத்தை பிடித்தார் லபுசாக்னே!
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுசாக்னே முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆஷஸ் 2ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் அணியின் பேட்டர் லபுசாக்னே முதல் டெஸ்டில் 74 ரன்களும் 2ஆவது டெஸ்டில் ஒரு சதமும் ஒரு அரை சதமும் அடித்தார்.
இதையடுத்து ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் லபுசாக்னே. 912 புள்ளிகளுடன் லபுஷேனும், 897 புள்ளிகளுடன் ஜோ ரூட்டும் முதல் இரு இடங்களிலும் ஸ்மித், கேன் வில்லியம்சன், ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்த மூன்று இடங்களிலும் உள்ளார்கள்.
ஆஷஸ் தொடர் ஆரம்பிக்கும் முன்பு, லபுஷேன் 4ஆம் இடத்தில் இருந்தார்.
அதேபோல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் இரு டி20 போட்டிகளில் சரியாக விளையாடாததால் முதல் இடத்தைப் பறிகொடுத்த பாகிஸ்தானின் பாபர் ஆஸம், கடைசி டி20 ஆட்டத்தில் நன்கு விளையாடியதால் முதல் இடத்துக்கு மீண்டும் முன்னேறியுள்ளார். பாபரும் இங்கிலாந்தின் மலானும் ஒன்றாக முதல் இடத்தில் உள்ளார்கள்.
Win Big, Make Your Cricket Tales Now