
தற்பொழுது ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று மிட்செல் மார்ஷ் தலைமையில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலியா அணி, தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 222 ரன்கள் மட்டுமே எடுத்துச் சுருண்டது. அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தனியாக போராடி சதம் அடித்து அணியை 200 ரன்களை தாண்ட வைத்தார். இதை அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 113 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் பந்து ஹெல்மெட்டில் தாக்கியதால் விளையாடாமல் வெளியேறினார்.
இப்படி இவர் வெளியேறிய காரணத்தினால், இவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் விளையாடலாம் என்கின்ற, புதிய விதியின் காரணமாக மார்னஸ் லபுஷாக்னே கடைசியாக விளையாட வந்து சுழற் பந்துவீச்சாளர் ஆஸ்டன் அகருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அணியை வெல்ல வைத்தது. பிளேயிங் லெவனில் இல்லாத லபுஷாக்னே விளையாடி ஆட்டநாயகன் விருதை வென்றார். இவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.