Advertisement

பகலிரவு டெஸ்ட்: சதத்தில் சாதனைப் படைத்த லபுசாக்னே!

பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர் எனும் அபாரமான சாதனைகளை படைத்துள்ளார் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசாக்னே.

Advertisement
Marnus Labuschagne plays down batting milestone
Marnus Labuschagne plays down batting milestone (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 17, 2021 • 07:13 PM

2018ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு தலையில் அடிபட்டபோது, அவருக்கு கன்கஷன் மாற்றாக அணியில் இடம்பிடித்த வீரர் மார்னஸ் லபுசாக்னே. கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்ட லபுசாக்னே, ஸ்மித் அணியில் இணைந்தபின்னரும், ஆஸ்திரேலிய அணியில் தனக்கான இடத்தை பிடித்து அபாரமாக ஆடிவருகிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 17, 2021 • 07:13 PM

இங்கிலாந்துக்கு எதிராக அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்துவரும் 2ஆவது டெஸ்ட்டில், டேவிட் வார்னர் (95) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (93) ஆகிய இருவரும் சதத்தை தவறவிட்ட நிலையில், சதமடித்த ஒரே வீரர் மார்னஸ் லபுசாக்னே தான். அபாரமாக ஆடி சதமடித்த லபுசாக்னே 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

Trending

இது லபுசாக்னே 6ஆவது டெஸ்ட் சதம். லபுசாக்னே ஆடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளுமே ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது தான் என்பதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட்டுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார் லபுசாக்னே.

ஜோ ரூட் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 6 சதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதே 6 சதமடித்துள்ள லபுசாக்னே ஜோ ரூட்டுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.

பகலிரவு டெஸ்ட் போட்டியில் லபுஷேன் 4 சதங்கள் அடித்துள்ளார். இதன்மூலம் பகலிரவு டெஸ்ட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை லபுசாக்னே படைத்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement